ஹிஸ்புல் பயங்கரவாத படைக்கு புதிய தளபதி-ரியாஸ் நைக்கூவிற்கு பிறகு இராணுவத்தின் வேட்டை

  • Tamil Defense
  • May 11, 2020
  • Comments Off on ஹிஸ்புல் பயங்கரவாத படைக்கு புதிய தளபதி-ரியாஸ் நைக்கூவிற்கு பிறகு இராணுவத்தின் வேட்டை

காசி ஹைதர் என்பவனை ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பு காஷ்மீருக்கான புதிய ஆபசேனல் தளபதியாக நியமித்துள்ளது.

காஷ்மீரில் சில நாட்களுக்கு முன் ஹிஸ்புல் அமைப்பின் முக்கிய டாப் கமாண்டரான ரியாஸ் நைக்கூவை நமது பாதுகாப்பு படைகள் நைத்து எடுத்த பிறகு இந்த முடிவை அப்பயங்கரவாத இயக்கம் எடுத்துள்ளது.

ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத படையின் செய்தி தொடர்பாளர் சலீம் ஹஷாமி வெளியிட்டுள்ள தகவல்படி, ஹிஸ்புல் பயங்கரவாத தலைவர் செய்து சலாவுதீன் மற்றும் பாக்கை மையமாக கொண்டு இயங்கும் பாக் ஐஎஸ்ஐ உதவியுடன் இயங்க கூடிய யுனிடெட் ஜிகாத் கௌன்சில் கூட்டம் நடைபெற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் காசி ஹைதர் என்பவனை புதிய ஆபரேசனல் கமாண்டராக நியமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இவன் தவிர ஸபல்ருல் இஸ்லாம் என்பவறை துணை ஆபரேசனல் கமாண்டராகவும் ,அபு தகிர் பாய் என்பவனை காஷ்மீர் பயங்கரவாத பிரிவு ஆலோசகராகவும் அந்த அமைப்பு நியமித்துள்ளது.

வேட்டை தொடரும்…!