
நேற்று நடைபெற்ற என்கவுன்டரில் இந்திய ராணுவத்தின் ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸின் 21ஆவது பட்டாலியனுடைய கட்டளை அதிகாரி, ஒரு மேஜர் , இரண்டு வீரர்கள் மற்றும் ஒரு காவல்துறை துணை ஆய்வாளர் ஆகியோர் வீரமரணமடைந்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்றே ஹன்ட்வாரா துணை மாவட்டத்தில் உள்ள வாடார்பாலா காட்டு பகுதியில் பயங்கரவாதிகளை சிறப்பு படையினர் தேடி வந்தனர். அடிக்கடி சண்டை நிகழ்வதும் பின்னர பயங்கரவாதிகள் பதுங்குவதுமாக தொடர்ந்த இது பின்னர் ஹன்ட்வாரா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் அப்பாவி மக்களை பணய கைதிகளாக பிடித்து வைத்து கொள்ள, தேடுதல் வேட்டை , என்கவுன்டர் ஆகி பின்னர் மீட்பு பணி ஆக மாறியது.
வீட்டுக்குள் இருந்தவர்களை மீட்க சென்ற நேரடியாக சென்ற 21ஆவது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸின் கட்டளை அதிகாரி கலோனல் அஷூதோஷ் ஷர்மா, மேஜர் அனுஜ் ஸூத், நாயக் ராஜேஷ் , நாயக் தினேஷ் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை துணை ஆய்வாளர் ஷகீல் காஸி ஆகியோர் கொல்லப்பட்டனர்.
இதில் ஒரே படையணியை சேர்ந்த நால்வர் உயிரிழந்து இருப்பது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் கலோனல் அஷூதோஷ் ஷர்மா இரண்டு முறை சேனா விருது பெற்றவர் தலைசிறந்த மூத்த அதிகாரி ஆவார்.
இவர்களை மீட்க பின்னர் சிறப்பு படைகள் களமிறங்கின, 4 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்ட நிலையில் ஐவரையும் உயிருடன் மீட்க முடியவில்லை.
வெறுமனே ஒரு மாத காலத்திற்குள் 5 சிறப்பு படை வீரர்கள், ஒரு கலோனல், ஒரு மேஜர், இரண்டு வீரர்கள் என மிகப்பெரிய இழப்பை ராணுவம் சந்தித்து உள்ளது.
வீரமரணமடைந்த அணைவருக்கும் எமது வீரவணக்கங்கள் !!
ஜெய்ஹிந்த்