
காஷ்மீரின் பத்கம் மாவட்டத்தில் பாதுகாப்பு படைகள் மீது கிரேனேடு வீசி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இந்த தாக்குதலில் பொதுமக்கள் இருவர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பத்கமின் பாகெர்போரா மார்க்கெட் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த 181வது பட்டாலியன் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வீசப்பட்ட கிரேனேடு வீரர்களிடம் இருந்து சற்று தள்ளி வெடித்ததால் வீரர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
கூட்டத்தை பயன்படுத்தி பயங்கரவாதி தப்பிவிட்டான்.தற்போது மேலதிக படைகள் வரவழைக்கப்பட்டு அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 24மணி நேரத்தில் இது மூன்றாவது தாக்குதல் ஆகும்.