ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்திற்கு மத்திய அரசின் வாய்ப்பு !!

  • Tamil Defense
  • May 13, 2020
  • Comments Off on ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்திற்கு மத்திய அரசின் வாய்ப்பு !!

நமது நாட்டின் விமான கட்டுமானம் மற்றும் தயாரிப்பு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு இந்திய கடற்படைக்கான 111ஹெலிகாப்டர்கள் விற்கும் ஒப்பந்தத்தில் பங்கு பெற மத்திய அரசு அனுமதி அளிக்கலாம் என தெரிகிறது.

மத்திய அரசின் மேக் இன் இந்தியா போன்ற கொள்கைகள் காரணமாகவும், சுதேசி பொருட்களை முன்னிலைப்படுத்தும் நோக்கத்திலும் இது இருக்கலாம் என கூறப்படுகிறது.

21,000கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில் வெளிநாட்டு நிறுனங்கள் கூட்டு முயற்சியில் இந்தியாவில் தயாரிக்க வேண்டும் என்பது நிபந்தனை ஆகும். ஆனாலும் இதில் ஹெலிகாப்டர்களின் எண்ணிக்கை நிதி பற்றாக்குறை காரணமாக குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தனது அதிநவீன இலகுரக ஹெலிகாப்டரை இந்த போட்டியில் பங்கேற்க அனுப்பலாம் ஆனால் கடற்படை வடிவத்திற்கான திட்டம் உள்ளதே தவிர இன்னும் ஒன்று கூட தயாரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.