
கொரோனா நிவாரண நிதியாக பலரும் தங்களால் இயன்றதை செய்து வருகின்றனர். பல்வேறு அரசு நிறுவன ஊழியர்கள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை அளித்து வருகின்றனர் என்பதும் தெரிந்த விஷயம் தான்.
அந்த வகையில் தற்போது இந்திய முப்படைகளின் கூட்டுபடைகள் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் தனது ஊதியத்தில் இருந்து மாதம் 50ஆயிரம் ருபாய் வீதம் அடுத்த 12மாதங்கள் கொரோனா நிவாரண நிதியாக வழங்க உள்ளார். இந்த தொகை அவரது ஊதியத்தில் இருந்து நேரடியாக பிடித்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் நான்காவது வலிமை வாயந்த ராணுவத்தின் மூத்த அதிகாரியான அவருடைய ஊதியம் மாதம் 2,50,000 ருபாய் மட்டுமே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.