
காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள அவந்திபோரா பகுதியில் ஜெய்ஸ் இ முகமது பயங்கரவாத கட்டமைப்பை தகர்த்த காஷ்மீர் காவல்துறை நான்கு பயங்கரவாதிகளை கைது செய்து அவர்களிடம் இருந்து வெடிபொருள்களை கைது செய்துள்ளது.
இவர்கள் நான்கு பேரும் பாக்கில் இருந்து ஊடுருவும் பயங்கரவாதிகளுக்கு புகலிடமும் சப்ளையும் அளித்து வந்துள்ளனர் என காஷ்மீர் காவல்துறை தகவல்கள் வெளியிட்டுள்ளது.
வெடிபொருள்கள்,தோட்டாக்கள் ஆகியவை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.