
சத்திஸ்கரில் பாதுகாப்பு படைகளுக்கும் நக்சல்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் சத்திஸ்கர் காவல்துறை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளாார்.
நமது படைகள் நடத்திய எதிர் தாக்குதலில் நான்கு நக்சல்கள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.
இந்தோ திபத் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் சத்திஸ்கர் காவல் துறையுடன் இணைந்து இந்த தாக்குதலை நடத்தினர்.இதில் இரு பெண் நக்சல்கள் உட்பட நான்கு நக்சல்கள் வீழ்த்தப்பட்டனர்.
சத்திஸ்கர் காவல் துறையின் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.பெரிய அளவிலான துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டன.