காஷ்மீரில் இன்று பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த தகவலின்படி 4 லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளின் பெயர்களாவன;
1)பிர்வாஹ்
2)ஃபருக் அஹமது
3)மொஹம்மது யாசின்
4)அசாருதீன் மீர்
இவர்கள் நால்வரும் பட்காம் பகுதியில் உள்ள வசிம்கானி கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
மேலும் இவர்களிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள், தோட்டாக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நடவடிக்கை தரைப்படையின் 53ஆவது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் மற்றும் பட்காம் காவல்துறையால் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.