சிஆர்பிஎப் வீரர்களின் உணவுத் தரம் எப்படி? நேரடி அலசல் பதிவு !
மத்திய ஆயுதம் தாங்கிய காவல் படை வீரர்களுக்கு தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாய் சில மாதங்களுக்கு முன் ஒரு குற்றச்சாட்டு வெளியானது.அதே போல எல்லைப் பாதுகாப்பு படையில் தேஜ் பகதூர் என்ற வீரர்கூட குற்றச்சாட்டு முன்வைக்க அந்த பிரச்சனை பெரிதாய் வெடித்து அந்த வீரரை படையில் இருந்தே வெளியேற்றியது மத்தியஉள்துறை அமைச்சகம்.
ஆனால் உண்மையாகவே குறைபாடான உணவு தான் வழங்கப்படுகின்றனவா என இராணுவத்திலும் சிஆர்பிஎப் போன்ற படைகளிலும் பணிபுரியும் எனது நண்பர்களிடம் கேட்டேன்.இராணுவத்தில் உணவு என்பது தரமானதாகவும் சத்தானதாகவும் வாரத்திற்கு மூன்று முதல் நான்கு நாட்களுக்கு ஊன் உணவும் வழங்கப்படுவதாக சிக்னல் கார்ப்சில் பணிபுரியும் எனது நண்பர் கூறினார்.
மேலும் சிஆர்பிஎப் வீரர்களிம் விசாரித்த பிறகு அவர்களும் உணவில் எந்த பிரச்சனையும் இல்லை என கூறினர்.நேற்று சிஆர்பிஎப் படையில் பணிபுரியும் நண்பர் ஒருவரின் சகோதரரிடம் கேட்டோம்.அவர் லங்கர் கமாண்டராக உள்ளார்.
அவர் உணவு குறித்த எங்கள் கேள்விகளுக்கு பதில் அளித்ததுடன் சில புகைப்படங்களையும் அளித்தார்.ஒரு குறிப்பிட்ட நாளில் மூன்று வேளைகள் வழங்கப்படும் உணவு குறித்து பகிர்ந்து கொண்டார்.
தரத்துடன் வீரர்களுக்மு சத்தான பலவகை உணவுகள் ஒரே நேரத்தில் வழங்கப்படுவதை அறிந்தோம்..அந்த புகைப்படங்கள் கீழே..
இதர உணவு படங்கள்