
தேசிய பாதுகாப்பு படையின் மருத்துவ பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து துணை ராணுவப்படைகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 700ஐ கடந்துள்ளது.
தேசிய பாதுகாப்பு படையில் இது முதல் சம்பவமாகும். பாதிக்கப்பட்டவர் மானேசரில் உள்ள தேசிய பாதுகாப்பு படையின் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.
அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதும் நொய்டாவில் உள்ள துணை ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து தேசிய பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “பாதிக்கப்பட்ட வீரர் தற்போது நிலையாக இருப்பதாகவும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் இதன் காரணமாக தங்கள் தயார் நிலை பாதிக்கப்படாது” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.