
நேற்று அமெரிக்க கடற்படையின் விமான தளமான நேவல் ஏர் ஸ்டேஷன் கார்பஸ் க்ரிஸ்டியில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார்.
உடனடியாக செயலில் இறங்கிய கடற்படை பாதுகாப்பு பிரிவினர், அந்த நபரை சுட்டு கொன்றனர். இதில் கடற்படை பாதுகாப்பு பிரிவை சார்ந்த மாலுமி ஒருவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும் சிகிச்சைக்கு பின்னர் மருத்துவமனையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதலில் ஈடுபட்டவர் அரேபியர் என்பதை தவிர வேறு எந்த தகவலும் வெளியிடப்படவில்லை, இந்த நிகழ்வு குறித்த விசாரணையை தற்போது அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு (எஃப். பி.ஐ) நடத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.
கடந்த டிசம்பர் மாதத்தில் மற்றோர் அமெரிக்க கடற்படை தளமான பென்ஸிகோலாவில் இத்தகைய தாக்குதலில் சவுதி அரேபிய பயிற்சி விமானி ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.