தள்ளிப்போகும் வெளிநாட்டு ஆயுத ஒப்பந்த பணத்தை உள்நாட்டில் திருப்பி விட திட்டம் !!

  • Tamil Defense
  • May 6, 2020
  • Comments Off on தள்ளிப்போகும் வெளிநாட்டு ஆயுத ஒப்பந்த பணத்தை உள்நாட்டில் திருப்பி விட திட்டம் !!

முப்படைகளுக்கென வெளிநாடுகளில் இருந்து வாங்கும் ஆயுதங்கள் சார்ந்த ஒப்பந்த பணத்தை உள்நாட்டு ஒப்பந்தங்களில் திருப்பி விட அரசு நினைக்கிறது.

இதன்படி பல்வேறு ஒப்பந்ததாரர்களிடம் டெலிவரிக்கான கால அவகாசம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதன் விவரங்கள் கிடைக்கும் பட்சத்தில் அதிக காலதாமதம் ஆகும் திட்டங்களுக்கான பணம் உள்நாட்டில் திருப்பி விடப்படும்.
இதன் காரணமாக சுமார் 2000 இந்திய நிறுவனங்கள் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி 39,000கோடி மதிப்பிலான 83 தேஜாஸ் விமானங்கள், 6000கோடி மதிப்பில் ஆறு ஸ்க்வாட்ரன் ஆகாஷ் ஏவுகணைகள், 6 ரெஜிமென்ட்டுகள் அளவிலான பினாகா பல்குழல் ராக்கெட் ஏவும் அமைப்பு, 8 அதிவேக ரோந்து கலன்கள் போன்ற திட்டங்கள் முன்னனியில் உள்ளன.