காஷ்மீரில் மத்திய ரிசர்வ் காவல்படை அதிகாரிகள் தற்கொலை !!

  • Tamil Defense
  • May 12, 2020
  • Comments Off on காஷ்மீரில் மத்திய ரிசர்வ் காவல்படை அதிகாரிகள் தற்கொலை !!

காஷ்மீரின் அனந்த்னாக் பகுதியில் பணியமர்த்தப்பட்டுள்ள மத்திய ரிசர்வ் காவல்படையின் 49ஆவது பட்டாலியனை சேர்ந்த துணை ஆய்வாளரான ஃபாத்தாஹ் சிங் தனக்கு கொரொனா தொற்று இருக்கமோ என அஞ்சி தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் நகரை சேர்ந்தவர் ஆவார். தனது கடிதத்தில் கொரொனா காரணமாக தற்கொலை செய்து கொள்வதாகவும் எனது உடலை யாரும் தொட வேண்டாம் எனவும் கடிதம் எழுதி வைத்துள்ளார்.
ஆனால் மத்திய ரிசர்வ் காவல்படை அதிகாரிகள் அவருக்கு கொரொனா அறிகுறிகள் ஏதும் இல்லை என கூறுகின்றனர்.

இதேபோல் காஷ்மீரில் பணியில் இருந்த மற்றொரு துணை ஆய்வாளர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால் தற்போது வரை தற்கொலைக்கான காரணங்கள் என்ன என்று தெரியவில்லை.