இணைக்கப்பட்டது முதல் சின்னூக் வானூர்தி படைகளுக்கு பெரிதும் உதவிகரமாக உள்ளது.கடந்த 2019 மார்ச் படையில் இணைக்கப்பட்டது முதல் பல்வேறு கட்ட இராணுவ/சிவில் பணிகளுக்கு சின்னூக் வானூர்தி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அனைத்துவித கடினமான பணிகளையும் மிக எளிமையாக செய்துமுடிக்க சின்னூக் எடை தூக்கும் போக்குவரத்து வானூர்தி உதவுகிறது.
படத்தில் உள்ளது போல குன்ஜி என்னுமிடத்திற்கு கட்டுமான பொருள்களை கொண்டு செல்ல சின்னூக் வானூர்தி பெரிதும் உதவியுள்ளது.இந்த பகுதி 10500 அடி உயரத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கைலாஷ் மானசரோவர் என்னுமிடத்திற்கு செல்ல அமைக்கப்பட்டு வரும் சாலை தொடர்பான கட்டுமானத்திற்கு உதவி உள்ளது சின்னூக் வானூர்தி.
.