
இரு நாட்டு வீரர்களும் எல்லையில் மோதிக்கொண்ட சம்பவத்தை பெரிதாக்க விரும்பாத சீனா வேறுபாடுகளை மறந்து அமைதியை முன்னிறுத்தி இருநாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என கூறியுள்ளது.
சீனத்தரப்பில் காயம்பட்ட வீரர்களை பற்றி எந்த தகவலும் வெளியிட விரும்பாத சீன வெளியுறவு அமைச்சகம் இந்திய வீரர்கள் மீது குற்றச்சாட்டை கூறியுள்ளது.
சிக்கிமில் 5000 அடி உயரத்தில நாகு லா பகுதியில் இரு நாட்டு வீரர்களுக்கிடையான பேச்சுவார்த்தை சண்டை மோதலாக வெடித்தது.இதன் காரணமாக இருநாட்டு வீரர்களுக்கும் காயம் ஏற்பட்டது.
லோக்கல் இராணுவ கமாண்டர்களுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு இரு நாட்டு வீரர்களும் கலைந்து சென்றுள்ளனர்.