தொடர்ந்து சீன ராணுவ நிதி அதிகரிப்பு, இந்தியாவை விட 2.7 மடங்கு அதிகம் !!

  • Tamil Defense
  • May 22, 2020
  • Comments Off on தொடர்ந்து சீன ராணுவ நிதி அதிகரிப்பு, இந்தியாவை விட 2.7 மடங்கு அதிகம் !!

எதிர்பார்த்தது போலவே இன்று சீன பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பாதுகாப்பு பட்ஜெட் தொடர்ந்து ஐந்தாவது முறையாக இந்த வருடமும் அதிகரித்துள்ளது.

கடந்த வருடம் இந்த ஒதுக்கீடு 177பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த நிலையில், இந்த வருடம் 179 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பணம் அதிகரித்தாலும், இந்த வருடம் உயர்த்தபட்ட தொகை கடந்த வருடத்தை விட குறைவு தான். சீனா தனது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.3% சதவீதமும் மட்டுமே ராணுவத்திற்கு செலவிடுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த வருடம் சீனா ராணுவத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ள பணம் இந்தியாவை விட 2.7 மடங்கு அதிகமாகும். கடந்த வருடத்தின் இந்திய பாதுகாப்பு பட்ஜெட் 4,71,000கோடி ஆகும். இந்த வருடம் இது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் ராணுவ செலவீனங்கள் சீன ராணுவத்தின் வலிமையை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது ஆகவே இந்தியா சுதாரித்து கொள்வது நல்லது !!