ஜப்பான் கடல்பகுதியில் சீனா ரவுடிசம்; கடும் கோபத்தில் ஜப்பான் !!
கொரோனா பாதிப்பு நேரத்தில் சீனா தன்னை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் தனது ஆதிக்கத்தை அதிகபடுத்த முயற்சி செய்கிறது, இந்திய எல்லை, மலேசிய கடல் பகுதி, வியட்நாமிய கடல்பகுதி என சுற்றி சுற்றி பல நாடுகளை தேவை இன்றி சீண்டி வருகிறது.
சமீபத்தில் கடந்த சனிக்கிழமை அன்று ஜப்பானுடைய டைய்யோ தீவு அருகே அத்துமீறி நுழைந்த சீன கடலோர காவல்படையின் நான்கு கப்பல்கள் அங்கு மீன்பிடித்து கொண்டிருந்த ஜப்பானிய படகுகளை விரட்டி அட்டுழியம் செய்துள்ளன, இதில் இரண்டு சீன கப்பல்கள் சுமார் 12கிமீ தொலைவு வரை ஒரு ஜப்பானிய மீன்பிடி படகை விரட்டியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
தகவலறிந்த அங்கு வந்த ஜப்பானிய கடலோர காவல்படை விடுத்த ரேடியோ எச்சரிக்கைக்கு பின்னர் சீன கப்பல்கள் திரும்பி சென்றுள்ளன. மேற்குறிப்பிட்ட டைய்யோ தீவையும் அதை சுற்றியுள்ள கடல் பகுதியையும் சீனா உரிமை கோரி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது மட்டுமின்றி அவ்வப்போது சீனா உரிமை கோரி வரும் கடல்பகுதிகளில் மீன்பிடிக்க தடை விதித்து பல நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறி ஆக்குகிறது.