எல்லையில் நான்கு இடங்களை குறிவைக்கும் சீனா ; நிரந்தரமாக கைப்பற்ற நினைக்கிறதா ?

  • Tamil Defense
  • May 24, 2020
  • Comments Off on எல்லையில் நான்கு இடங்களை குறிவைக்கும் சீனா ; நிரந்தரமாக கைப்பற்ற நினைக்கிறதா ?

இந்திய-திபத் (சீனா) எல்லை 3488கிமீ அளவுக்கு விரிந்து பரந்திருந்தாலும் சீனா நான்கு இடங்களை மட்டுமே அதிகமாக குறிவைத்து ஊடுருவல் நடத்தியுள்ளது.2015 முதல் நடைபெற்ற 80% சம்பவங்களில் நான்கு இடங்களில் தான் அதிகமாக ஊடுருவல்கள் நடந்துள்ளன.அவற்றுள் மூன்று கிழக்கு லடாக் பகுதியில் உள்ளன.

பங்கோங் ஏரி ( தற்போது மோதல் நடக்கும் இடம், ட்ரிக் மற்றும் பர்ட்சி ஆகிய இடங்களில் அதிகமான ஊடுருவல் நடைபெற்றுள்ளது.

2019ல் இருந்தே சீன ஊடுருவல்கள் அதிகரித்தே வந்துள்ளன.டோலெடாங்கோ எனும் பகுதியில் 2019ல் மட்டுமே 54 ஊடுருவல்கள் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கிழக்கு செக்டாரை பொறுத்தவரை பெரிய அளவில் எந்த ஊடுருவல்களும் நடைபெறவில்லை.இந்த மாத தொடக்கத்தில் நாகு லா பகுதியில் சண்டை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

உத்ரகண்டில் உள்ள பரஹோடி என்னுமிடத்தில் 2019ம் ஆண்டு 2 முறையும் ,2018ல் 30 முறையும் ஊடுருவல் நடைபெற்றுள்ளது.இந்த பகுதியில் எல்லாம் எல்லைகள் சரியாகவே வரையறுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

135கிமீ நீள பங்கோங் ஏரியின் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவிடம் உள்ளது.மொத்த ஊடுருவல்களில் 25% இந்த ஏரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ட்ரிக் எனும் பகுதியில் 22% மற்றும் பர்ஸ்சி என்னும் பகுதியில் 19% ஊடுருவல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பங்கோங் ஏரியில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு குறித்த இரு நாடுகளின் முரண்பாடு காரணமாகவே இங்கு அதிக ஊடுருவல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது பிரச்சனையின் மையப்புள்ளியாக இருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் இதுவரை பெரிய ஊடுருவல்கள் நடைபெற்றதில்லை.2017ல் ஆறு முறையும்,2018 மற்றும் 2016களில் ஒரு முறையும் மற்றும் 2019ல் ஊடுருவல்கள் ஏதுமன்றியும் இருந்தது.

1962 போருக்கு பிறகு இரு நாடுகளும் ஏற்றுக்கொண்ட ஒரு எல்லை காரணமாக தான் கல்வான் பள்ளத்தாக்கில் பெரிய பிரச்சனை ஏதுமின்றி இருந்தது.ஆனால் சீன தற்போது அங்கு பிரச்சனை செய்து வருகிறது.அவர்கள் கூறும் காரணம் இந்தியாவின் கட்டுமானப்பணிகள் தான்.