பதற்றம் குறையாத எல்லைப் பிரச்சனை; ஆர்டில்லரிகளை எல்லைக்கு நகர்த்தும் சீனா

  • Tamil Defense
  • May 29, 2020
  • Comments Off on பதற்றம் குறையாத எல்லைப் பிரச்சனை; ஆர்டில்லரிகளை எல்லைக்கு நகர்த்தும் சீனா

டிப்ளோமேட்டிக் அளவில் இரு நாடுகளும் பிரச்சனையை பேசி முடிக்க முனைப்பு காட்டும் வேளையிலும் கல்வான் பள்ளத்தாக்கிற்கு எதிர்ப்புறம் உள்ள சீனப்பகுதியில் சீன இராணுவம் இழுவை ஆர்டில்லரிகள் மற்றும் மற்ற மெக்கனைஸ்டு படைகளை நகர்த்தி உள்ளது.

இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளதாவது, செயற்கைகோள் படங்களை ஆராயும் போது இவை அனைத்தும் உறுதியாக தெரிகிறது எனவும் இதன் மூலம் நமது படைகள் சீன ஆர்டில்லரிகள் தாக்கும் தொலைவுக்குள் வந்துள்ளதாகவும் கூறியுள்ளது.

16 டேங்குகள் உடன் கலவையாக இன்பான்ட்ரி காம்பாட் வாகனங்கள் தெளிவாக தெரிகின்றன.ஃப்ளாட்பெட் ட்ரக்,அகழ்வு இயந்திரஙகள் மற்றும் டம்பர் ட்ரக்குகள் ஆகியவையும் எல்லைக்கு நகர்த்தப்பட்டுள்ளன.இதன் மூலம் சீனர்கள் நிரந்தரமான பாதுகாப்பு அமைப்புகள் ஏற்படுத்துவது தெளிவு.

இதற்கு ஏற்றவாறே இந்தியாவும் தனது படைகளை அனுப்பியுள்ளது.சீனாவை சமாளிக்க அங்கு தற்போதுள்ள படைகள் போதுமானவையாக உள்ளது.

பாங்கோங் ஏரியின் தூரதென் பகுதியில் உள்ள ஃபாக்ஸ்ஹோல் பாயின்ட் என்னுமிடம் சீனப்படைகள் கட்டுபாட்டில் தற்போது உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.பிங்கர் 3 மற்றும் பிங்கர் 4 ஆகிய இடங்களுக்கு நடுவே தான் இந்த
ஃபாக்ஸ்ஹோல் இடம் உள்ளது.இதன் மூலம் அந்த பகுதியில் சீனர்களின் கை ஓங்கியுள்ளது.இது நமது படைகளுக்கு அதிருப்தி அளித்துள்ளது.

பாங்கோங் ஏரியில் எல்லைக்கோடு சரியான முறையில் வரையறுக்கப்படவில்லை.நாம் அவர்கள் நமது எல்லைக்குள் வந்துவிட்டார்கள் எனக் கூறும் வேளையில் சீனர்களோ நமது படைகள் தான் சீன எல்லைக்குள் நுழைந்துள்ளதாக கருதுகின்றனர்.இருந்தாலும் பிரச்சனையில்லாமல் இருந்த கோக்ரா,ரோந்து பாயிண்ட்-14,15 ஆகிய பகுதியிலும் தற்போது பிரச்சனை எழுந்துள்ளது.இந்த பகுதியில் 2-3கிமீ அளவுக்கு சீனப்படைகள் ஊடுருவியுள்ளன.

ரோந்து பாயின்ட் 14-15 தவிர நான்கு பிங்கர் மற்றும் க்ரீன் டாப் ஆகிய பகுதிகளிலும் சீனர்கள் கேம்ப் அமைத்துள்ளனர்.எல்லைக் கிராமங்களான மேராக்,லூகுங்,உருங்,மேன்,ஸ்பங்மிக் மற்றும் காக்ஸ்டெல் ஆகியவற்றை சேர்ந்த மக்கள் சீன ஊடுருவல்களால் கவலை அடைந்துள்ளனர்.

எல்லையில் பிரச்சனை நிலையானதாகவும் மற்றும் கட்டுப்பாட்டிலும் உள்ளதாக சீனத்தூதர் கூறினாலும் எல்லையில் ஆர்டில்லரிகளை சீன நகர்த்தி பதற்றத்தை அதிகரித்தே வருகிறது.

அடுத்து 72 மணி நேரத்திற்குள் சீனப்படைகள் வெளியேறுகிறாத என காண வேண்டும்.இதுவரை படைக்குவிப்பிற்கான எந்த அறிகுறியும் இல்லை.நாமும் எந்த படைக்குறைப்பும் செய்யவில்லை என அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.ஆனால் ஆனால் படைக்குவிப்பு தொடர தான் செய்கிறது.