கல்வான் நாலா பகுதியில் தற்போது இருநாட்டு படைகளும் குவிக்கப்பட்டு உள்ள நிலையில் சீன தளவாடங்களை நகர்த்தியுள்ளதாக தெரிகிறது.
எல்லை கட்டுபாட்டு கோடு பகுதியில் இருந்து சற்றே தொலைவில் சீன ராணுவம் 16டாங்கிகள், பிரங்கிகள், பல்குழல் ராக்கெட் லாஞ்சர்கள் ஆகியவற்றை நகர்த்தியுள்ளதாக தெரிகிறது.
மேலும் பதுங்கு குழிகளில் சீன ராணுவத்தினர் இயந்திர துப்பாக்கிகளை பொருத்தி சண்டைக்கு தயாராக உள்ளனர் எனவும் கூறப்படுகிறது
மறுபுறம் நமது பக்கத்தில் படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டு வருகின்றனர் ஆனால் தளவாட நகர்வுகள் குறித்த செய்தி ஏதுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.