
சீனா மேம்படுத்தியுள்ள புதிய ஆளில்லா வானூர்தியை இந்தியா சீனா எல்லையில் நிலைநிறுத்த உள்ளதாக சீன மீடியா தகவல் வெளியிட்டுள்ளது.
AR500C எனப்படும் இந்த ஆளில்லா வானூர்தியால் fire strikes நடத்தவும் மற்றும் இலக்கின் electronic circuitry-ஐ குழப்பவும் முடியும்.
இந்திய சீன எல்லைப் பிரச்சனை நடந்து வரும் இன்னேரத்தில் இதன் முதல் சோதனை நடந்தேறி உள்ளது.
தற்போது நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்தியா தான் காரணம் என சீனா கூறி வருகிறது.இதன் காரணமாக தேவையான நடவடிக்கை என்ற பெயரில் சீன ஆளில்லா வானூர்தியை எல்லையில் நிலைநிறுத்த முடிவு செய்துள்ளதாக சீன மீடியா தெரிவித்துள்ளது.
சீனாவின் ஏவியேசன் இன்டஸ்ட்ரி கார்பரேசன் ஆப் சீனா என்ற நிறுவனத்தால் இந்த வானூர்தி மேம்படுத்தப்பட்டுள்ளது.
மணிக்கு 170கிமீ என்ற வேகத்தில் இந்த வானூர்தி பறக்க கூடியது மற்றும் ஐந்து மணி நேரம் தொடர்ந்து செயல்பட கூடியது.