கொரோனா தொற்று காரணமாக அமெரிக்க சீன உறவுகள் மிகவும் மோசமடைந்துள்ள நிலையில் பல்வேறு நாடுகளும் சீனாவின் மீதான அதிருப்தியில் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்நிலையில் வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று சீன பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள பாதுகாப்பு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கலாம் என பரவலான எதிர்பார்ப்பு உள்ளது.
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனா கடந்த வருடம் 7.5% அளவுக்கு தனது பாதுகாப்பு பட்ஜெட்டை அதிகரித்தது, அதாவது 167 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கீடு செய்தது.
இந்த வருடத்தில் 6.4% ஆக அதன் பொருளாதாரம் சுருங்கினாலும், கொரோனா தொற்று சீனாவை கடுமையாக பாதித்திருந்த நிலையிலும் பல்வேறு நாடுகளுடனான பதட்டம் இந்த வருடமும் அதிக அளவில் ராணுவத்திற்கு செலவிட சீனாவை தூண்டும் என தெரிகிறது.
உலகமே கொரோனாவால முடங்கி இருந்த நிலையில் தென்சீன கடலில் அமெரிக்க சீற கடற்படைகள் ஆக்ரோஷமாக நடந்து கொண்டன, மேலும் இரு நாட்டு உறவுகளும் மோசமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஷாங்காய் நகரத்தில் உள்ள ஜியாவோ டாவ் பல்கழைகழகத்தின் அரசியல் பேராசிரியரும் பாதுகாப்பு வல்லுநருமான ஸியு யூ கூறுகையில் “கடந்த வருடத்தை விடவும் இந்த வருஞம் பாதுகாப்பு பட்ஜெட் அதிக அளவில் அல்லது குறைந்த அளவில் அதிகரிக்குமா என்பது தெரியவில்லை ஆனால் நிச்சயமாக பாதுகாப்பு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கும் எனவும், தேசிய பாதுகாப்பு காரணமாக சீனா மேற்குலகத்திற்கு குறிப்பாக அமெரிக்காவிற்கு முன் வலிமை இழந்து விடக்கூடாது என்று கூறினார்.
அதைப்போல பெய்ஜிங் பல்கழைகழகத்தின் பொது நிர்வாக பள்ளியின் இயக்குனர் டான் ரெய்வூ “அரசு எதை நிறுத்தினாலும் ராணுவ நிதி ஒதுகீட்டை மட்டும் நிறுத்தவோ குறைக்கவோ செய்யாது என்கிறார்.
மேலும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு பெற்ற ஊணகமான க்ளோபல் டைம்ஸ் பத்திரிக்கையின் எடிட்டர் ஹூ ஸிஜின் வெளியிட்ட கட்டுரையில் “சீனா தனது ராணுவத்திற்கு அதிகம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும், தற்போது சீனாவிடம் உள்ள 200+ அணு ஆயுதங்களை 1000ஆக அதிகரிக்க வேண்டும் எனவும் , அதில் குறைந்தபட்சம் 100ஐ டி.எஃப்41 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளில் பொருத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
எது எப்படியோ சீனா தனது ராணுவ வலிமையை சற்றும் குன்ற விடாது என்பது மட்டும் நிதர்சனம்.