
கொரானவை காரணம் காட்டி இந்தியாவில் இருந்து சீனர்களை சீன நாட்டு அரசாங்கம் மீட்க உள்ளதாக அந்நாட்டு துதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் சிக்கியுள்ள மாணவர்கள்,சுற்றுலா சென்றவர்கள் மற்றும் பிசினஸ்மேன்களை மீட்டு சீனா அழைத்து செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மே 27க்குள் சீன திரும்ப விரும்புபவர்கள் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.
சிறப்பு விமானங்கள் வழியாக இவர்கள் மீட்கப்படுவர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.எங்கிருந்து எப்போது விமானங்கள் கிளம்பும் என்ற தகவல்கள் வெளியாகவில்லை.
இந்தியா சீனா இடைடேயான எல்லை மோதல் அதிகரித்தும் வரும் வேளையில் இந்த திட்டத்தை சீனா வெளியிட்டுள்ளது.