விமானம் தாங்கி கப்பலில் இருந்த ஏவக்கூடிய புதிய தாக்கும் விமானம் மேம்படுத்தியுள்ள சீனா

  • Tamil Defense
  • May 13, 2020
  • Comments Off on விமானம் தாங்கி கப்பலில் இருந்த ஏவக்கூடிய புதிய தாக்கும் விமானம் மேம்படுத்தியுள்ள சீனா

JL-9G எனப்படும் அந்த புதிய விமானம் விமானம் தாங்கி கப்பலில் இருந்து பறக்கும் திறனுடன் மேம்படுத்தியுள்ளது.ஒற்றை என்ஜின் கொண்ட அந்த விமானத்தை முதல் முறையாக மே12 அன்று சோதனை செய்துள்ளது சீனா.

ஏற்கனவே மேம்படுத்தியுள்ள கனரக ஜே-15 இரட்டை என்ஜின் விமானத்துடன் இந்த விமானம் இணைந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.விரைவில் சோதனைகள் முடிக்கப்பட்டு இந்த விமானம் படையில் இணைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சோவியத்தின் பழைய மிக்-21 வடிவத்தில் இருந்து சிறிது மாற்றங்களுடன் இந்த விமானம் மேம்படுத்துள்ளது.முழு கண்ணாடி காக்பிட்,அதிநவீன ஏவியோனிக்ஸ் மற்றும் சென்சார்கள் ,தவிர வான்-வான் மற்றும் வான்-தரை நடவடிக்கைகளுக்கான குண்டுகள் சுமக்கும் திறனுடன் இந்த விமானம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

பயிற்சி விமானமாக மேம்படுத்தப்பட்டுள்ள இந்த விமானம் அதிக ஆபத்தில்லாத நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தும் வண்ணம் மேம்படுத்தப்பட்டுள்ளது. 150m/s மேலெலும்பும் வேகமும், மாக் 1.5 வேகமும் கொண்டுள்ளது.

PL-8 மற்றும் PL-9 வான்-வான் ஏவுகணைகளை சுமக்கும் திறனும் பெற்றுள்ளது.அதிநவீன டிஸ்பிளே உள்ள தலைகவசமும் கொண்டுள்ளது.