லடாக் ஏரியில் அதிக கப்பல்களை அனுப்பும் சீனா , இந்தியாவும் படைக்குவிப்பு

  • Tamil Defense
  • May 21, 2020
  • Comments Off on லடாக் ஏரியில் அதிக கப்பல்களை அனுப்பும் சீனா , இந்தியாவும் படைக்குவிப்பு

பங்கோங் ஏரியில் இரு முறை கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் இன்றும் பிரச்சனை ஓய்ந்தபாடில்லை.தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என சீனா தொடர்ந்து வீரர்களை அனுப்பி வருகிறது.

இந்தோ திபத் எல்லையில் உள்ள பைஜிங் மற்றும் லிஜின் டுவான் பகுதிக்குள் இந்திய வீரர்கள் நுழைந்து சீன ரோந்தை தடுப்பதாக சீனா குற்றம் சாட்டி வருகிறது.

இந்த பிரச்சனை தொடர்பாக இராணுவம் மற்றும் வெளியுறவுச் செயலகம் இன்னும் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியப் பகுதிக்குள் பாலம் கட்டுமானம் நடைபெற்று வருகிறது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீன வீரர்கள் பிரச்சனை செய்து வருவதோடு படைக்குவிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

பாங்கோங் ஏரிக்கு 200கிமீ வடக்கே இந்த கட்டுமானம் நடைபெற்று வருகிறது.தற்காலிக எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுக்கு மிக அருகே இந்த சாலை அமைக்கப்படுவதால் சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

தற்போது சீன வீரர்கள் 70-80 டென்ட்கள் அமைத்து இந்திய எல்லைக்கு அருகிலயே உள்ளனர்.கனரக வாகனங்கள் மற்றும் கண்கானிப்பு வாகனங்கள் ஆகியவற்றை அங்கு நிலைநிறுத்தியுள்ளனர்.
இந்த பகுதிகள் SSN அல்லது sub-sector north எனப்படுகிறது.இது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வரும்.இதற்கு தெற்கே ஹாட் ஸ்பிரிங் எனப்படும் பகுதி ஐடிபிபி படைப் பிரிவின் கீழ் வரும்.

பாங்கோங் ஏரி போல அல்லாமல் கல்வான் பகுதி பிரச்சனைக்குரியதாக இருக்கவில்லை.எல்லையில் பிரச்சனை இல்லாமல் பாதுகாப்போம் என இரு நாட்டு வீரர்களும் முடிவெடுத்து இந்த பகுதியில் பிரச்சனையே இல்லாமல் இதுவரை ரோந்து பணி இரு நாட்டு வீரர்களாலும் நடத்தப்பட்டது.ஆனால் தற்போது இந்தியா தனது பகுதிக்குள் சாலை அமைப்பதை தான் சீன எதிர்க்கிறது என ஒரு அதிகாரி கூறியுள்ளார்.

இந்தியாவும் அதிக வீரர்களை அனுப்பினாலும் சம்பவ இடத்திற்கு வீரர்களை அனுப்பவில்லை.

தற்போது பங்கோங் ஏரி பகுதியில் சீனா அதிக கப்பல்களை களமிறக்கி உள்ளது.இங்குள்ள மலைப்பகுதிகளை நமது வீரர்கள் ஃபிங்கர் என குறிச்சொல்லால் அழைக்கின்றனர்.ஃபிங்கர் 8 வரை செல்ல உரிமை உள்ளதாக இந்திய வீரர்கள் கூறினாலும் ஃபிங்கர் 2 உடனேயே நமது வீரர்களை சீனர்கள் தடுக்கின்றனர்.ஆனால் இந்த பகுதிகளை முழுமையாக ஆதிக்கம் செலுத்த இரு நாட்டு வீரர்களும் முயல்கின்றனர்.நமது வீரர்கள் ஃபிங்கர் 4 வரை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

தற்போது அடுத்த லெவல் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானாலும் நேரம் தேதி தெரிவிக்கப்படவில்லை.