இந்திய எல்லைக்கு அருகே இலகுரக டேங்க் மற்றும் தாக்கும் வானூர்திகளை நிலைநிறுத்தியுள்ள சீனா

  • Tamil Defense
  • May 31, 2020
  • Comments Off on இந்திய எல்லைக்கு அருகே இலகுரக டேங்க் மற்றும் தாக்கும் வானூர்திகளை நிலைநிறுத்தியுள்ள சீனா

இந்திய எல்லைக்கு அருகே இலகுரக டேங்க் மற்றும் தாக்கும் வானூர்திகளை சீனா நிலைநிறுத்தியுள்ளதாக அந்நாட்டு மீடியாவான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

டோகலாம் மோதலுக்கு பிறகு , அதிஉயர பகுதிகளில் போரிட டைப் 15 டேங்க், Z-20 வானூர்தி மற்றும் GJ-2 ட்ரோன்கள் என தனது படை பலத்தை அதிகரித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

டைப் 15 ஒரு இலகு ரக டேங்க் ஆகும்.கடினமான டேங்குகளை விட மலைப்பகுதியில் இலகுரக டேங்குகள் சிறப்பாக செயல்படும் என செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இது தவிர நவீன வாகனத்தில் வைக்கப்படும் PCL-181 ஹௌவிட்சர்களையும் சீனா உருவாக்கியுள்ளது.இலகுரகமாவும் வேகமாகவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாக குளோபல் டைம்ஸ் கூறியுள்ளது.

இதுவரை 8*8 சக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருக்கும் பல ராக்கெட் ஏவு அமைப்பும் இருப்பதாக கூறியுள்ளது.தவிர Z-20 வானூர்தியும் இடம்பெற்றுள்ளது.
அனைத்து காலநிலைக்கும் இந்த வானூர்தி ஏற்றது.

திபத் போன்ற மலைப் பாங்கான பகுதியில் வைத்து இயக்குவதற்கென்றே பல இராணுவ தளவாடங்களை சீனா கொண்டுள்ளதாக குளோபல் டைம்ஸ் கூறியுள்ளது.