
சீன கடற்படை தன் இரண்டு விமானந்தாங்கி கப்பல்களான லியோனிங் மற்றும் ஷான்டோங் ஆகியவை இந்த போர் ஒத்திகையில் ஈடுபட உள்ளதாக தெரிகிறது.
லியோனிங் தற்போது மஞ்சள் கடல் பகுதியில் உள்ள போகாய் விரிகுடாவில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது, ஷான்டோங் டாலியான் நகரத்தில் இருந்து புறப்பட்டு போகாய் விரிகுடா நோக்கி பயணிக்கிறது. அங்கு இரு கப்பல்களும் தயார்படுத்தலுக்கு பின்னர் தைவானுக்கு அருகே உள்ள பராட்டல் தீவுகளுக்கு அருகே சென்று போர்ப்பயிற்சியில் ஈடுபட உள்ளன.
இந்த பயிற்சி குறித்த அறிவிப்பு தைவான் ஒருங்கிணைப்புக்கான முன்னோட்டமா எனும் அச்சத்தை கிளப்பி உள்ளது.
மேலும் தைவான் ஒருங்கிணைப்பு அவசியம் என சீன பிரதமர் லீ கெகியாங் கூறியதும், சீன அதிபர் ஷி ஜின்பிங் போருக்கு தயாராக இருக்க வேண்டும் என சீன ராணுவத்திற்கு வேண்டுகோள் விடுத்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.