சீன எல்லைக்குள் இந்திய வீரர்கள் நுழைந்து சீன வீரர்களை தடுப்பதாக சீனா குற்றச்சாட்டு-சிக்கிம் எல்லையிலும் பதற்றம்

  • Tamil Defense
  • May 20, 2020
  • Comments Off on சீன எல்லைக்குள் இந்திய வீரர்கள் நுழைந்து சீன வீரர்களை தடுப்பதாக சீனா குற்றச்சாட்டு-சிக்கிம் எல்லையிலும் பதற்றம்

சீன எல்லைக்குள் நுழைந்து சீன வீரர்களின் ரோந்தை இந்திய வீரர்கள் தடுப்பதாக சீனா மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது.

டோகாலாம் பிரச்சனைக்கு பிறகு தற்போது நடக்கும் பிரச்சனை தீவிரமாகி வருகிறது.

சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட தகவல்படி சிக்கிம் பகுதியில் இந்திய வீரர்கள் எல்லைத் தாண்டி சீன எல்லைக்குள் வந்ததாக குற்றம் சாட்டியுள்ளது.

இந்தியா உடனடியாக தனது வீரர்களை திரும்ப பெற வேண்டும் என சீனா கூறியுள்ளது.இதற்கு நமது பக்கம் பதில் ஏதும் அளிக்கவில்லை.

தற்போது மோதல் நீடித்து வரும் நான்கு முக்கிய இடங்களுள் சிக்கிமில் உள்ள நாகு லா என்ற இடமும் ஒன்று.இது தவிர பாங்கொங் ஏரி, கல்வான் ஆற்றுப்பகுதி மற்றும் லங்மார்போ ஆகிய பகுதிளிலும் மோதல் நீடித்து வருகிறது.

இந்த பகுதிகளில் இரு நாட்டு இராணுவங்களும் அதிக படைகளை குவித்து வருகிறது.மே 5ம் தேதி பாங்கோங் ஏரியிலும், மே 9ல் நாகுலா பகுதியிலும் மோதல் ஏற்பட்டது.

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா கட்டுமானம் ஏற்படுத்தி வருவதாக சீனா கூறி வருகிறது.