சீனா பல்வேறு நாடீகளுடன் எல்லை தகராறில் ஈடுபட்டு வருகிறது தெரிந்த விஷயம் தான். ஆனால் கடந்த சில நாட்களில் புதிதாக சில பகுதிகளை சீன ஊடகங்கள் உரகமை கோர தொடங்கி உள்ளன.
சமீபத்தில் நேபாள நாட்டிற்கு சொந்தமான எவரெஸ்ட் சிகரத்தை சீன அரசு ஊடகம் உரிமை கோரி பின்னர் எழுந்த எதிர்ப்புகள் காரணமாக திருத்தி கொண்டது.
தற்போது அந்த வரிசையில் கஸகாஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்துள்ளன.
டுவாடியாவோ எனும் சீன ஆன்லைன் ஊடகம் ஒன்று மங்கோலியாவை போன்றே கிர்கிஸ்தான் சீன நாட்டின் ஒரு பகுதி என்றும் செங்கிஸ்கான் காலத்திற்கு பின் ரஷ்யா எடுத்து கொண்டதாகவும் கட்டுரை வெளியிட்டுள்ளது.
இதே போல ஸாஹோ எனும் மற்றொரு ஆன்லைன் ஊடகம் கஸகாஸ்தான் நாடு வரலாற்று ரீதியாக சீனாவுக்கு சொந்தமான பகுதி என ஒரு கட்டுரை வெளியிட்டு உள்ளது.
இதனையடுத்து மத்திய ஆசியாவில் சீனா மீதான அதிருப்தி பன்மடங்கு அதிகரித்து உள்ளது. கஸகாஸ்தான் அரசு சீன தூதரை அழைத்து கடும் கன்டனத்தை தெரிவித்துள்ளது.
பொதுவாக மத்திய ஆசிய நாடுகளில் சீனாவின் முதலீடுகள் மிக அதிகம் இதுவே அவர்களுக்கு பலவீனமாகவும் அமைகிறது.
உதாரணமாக கிர்கிஸ்தான் சீனாவின் எக்ஸிம் வங்கியில் இருந்து சுமார் 1.7பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பணத்தை கடனாக பெற்றுள்ளது இது அந்நாட்டின் மொத்த கடனில் 43% ஆகும்.
கஸகாஸ்தானில் கூட சீனா எரிபொருள் துறையில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.