நேற்றைய தினம் சீன அரசு ஊடகமான சைனா க்ளோபல் டிவி நெட்வொர்க் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டது. அதில் எவரெஸ்ட் சிகரம் சீனாவின் பகுதியில் உள்ளது என பதிவிட்டு இருந்தது.
இதனையடுத்து நேபாளத்தில் கடுமையான கொந்தளிப்பு உருவாகியது, பல ஆயிரம் ஆண்டுகளாக நேபாள நாட்டிற்கு சொந்தமாக இருக்கும் எவரெஸ்ட் சிகரத்தை சீனா எப்படி உரிமை கோரலாம் என கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
ட்விட்டரில் சீன அரசு மற்றும் நேபாளத்தில் உள்ள சீன தூதரகத்தை நேபாள மக்கள், ஊடகத்தினர் கடுமையாக தாக்கி விமர்சனம் செய்தனர்.
இதனையடுத்து கவன குறைவால் இது நடந்ததாக கூறி வருத்தம் தெரிவித்த சீன ஊடகம் தனது பதிவை சீன நேபாள எல்லையில் உள்ள எவரெஸ்ட் சிகரம் என சரி செய்து கொண்டது.