ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் அத்துமீறலில் ஈடுபடும் சீனா !!

  • Tamil Defense
  • May 15, 2020
  • Comments Off on ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் அத்துமீறலில் ஈடுபடும் சீனா !!

இந்திய எல்லையில் மட்டும் சீனா அத்துமீறல் செய்யவில்லை பல்வேறு நாடுகளுடன் சீனா எல்லை பிரச்சினையில் ஈடுபட்டு வருகிறது.

இந்தியாவுடன் சிக்கீம் மற்றும் லடாக்கில் மோதல்,மலேசியாவுடன் தென் சீன கடலில் மோதல், வியட்நாமுடன் தென் சீன கடலில் மோதல் சமீபத்தில் ஒரு வியட்நாமிய மீன்பிடி படகை சீன கடலோர காவல்படை முழ்கடித்தது, தைவானுடன் மோதல், இந்தோனிசியாவுடன் மறைமுகமாக மோதல் அதாவது இந்தோனேசிய தொழிலாளர்களை சீன நிறுவனங்கள் கொடுமைப்படுத்தி வருகின்றன சமீபத்தில் மூன்று இந்தோனேசிய மீன்பிடி தொழிலாளர்கள் இதனால் மரணத்தை தழுவினர்.

கொரொனாவுக்கு பின்னர் சீனாவை விட்டு பல்வேறு நிறுவனங்கள் வெளியேற முடிவு செய்துள்ளன. இதற்கு மாற்றாக தொழில் தொடங்க இந்தியா, வியட்நாம் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளை பல்வேறு நிறுவனங்கள் பிரதான இடங்களாக தெரிவு செய்துள்ளன.

ஆகவே சீனா தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தவும், பல்வேறு நாடுகளை மிரட்டி வைக்கவும் முயன்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக எல்லை பிரச்சினைகளை கையில் எடுத்து முரட்டுத்தனமாக செயல்பட்டு வருகிறது என கூறப்படுகிறது.