
உத்தர பிரதேச மாநில அரசு ஆக்ரா, லக்னோ, கான்பூர், சித்ராகூட் மற்றும் ஜான்ஸி ஆகிய நகரங்களை இணைத்து ஆயுதங்களை தயாரிக்க உருவாக்கப்படும் பாதுகாப்பு தாழ்வார கொள்கையை தமிழகம் மற்றும் குஜராத் மாநில கொள்கைகளில் சிலவற்றை பெற்று மேம்படுத்த உள்ளது.
கடந்த ஃபெப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்ட இத்திட்டம் மேற்குறிப்பிட்ட 5 நகரங்களில் சுமார் 5000ஏக்கர் பரப்பளவில் நிர்மாணிக்கப்பட உள்ளது.
ஏற்கனவே சுமார் 4000 கோடி ருபாய் அளவுக்கு முதலீடுகளை ஈர்த்துள்ள இத்திட்டம் சுமார் 20,000 கோடி ருபாய் வரை முதலீடுகளை ஈர்க்கும் என உத்தர பிரதேச மாநில அரசு எதிர்பார்க்கிறது.