பாகிஸ்தானை பந்தாடும் இந்திய இராணுவம்-3 பாக் வீரர்களை வீழ்த்தியது

  • Tamil Defense
  • May 8, 2020
  • Comments Off on பாகிஸ்தானை பந்தாடும் இந்திய இராணுவம்-3 பாக் வீரர்களை வீழ்த்தியது

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாக் இராணுவத்திற்கு இந்திய இராணுவம் அளித்த தகுந்த பதிலடியில் மூன்று பாக் வீரர்கள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.நான்கு பாக் நிலைகள் தகர்க்கப்பட்டுள்ளன.

காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாக் இராணுவம் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியது.கடந்த ஆறு நாட்களில் இது மூனாறாவது முறை ஆகும்.

எல்லைப்பகுதிகளில் தொடர்ந்து மோர்ட்டார்களை வீசி பாக் நடத்திய தாக்குதலுக்கு இந்திய இராணுவம் கடுமையான முறையில் இன்று பதிலடி கொடுத்தது.

தற்போது வெளியாகியுள்ள தகவல்படி மூன்று முதல் நான்கு பாக் வீரர்கள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.ஐந்துக்கும் மேற்பட்ட பாக் வீரர்கள் காயமடைந்துள்ளனர்.பாக் நிலைகளுக்கும் கடுமையான சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

மே 7 அன்று பாக் நடத்திய தாக்குதலில் இந்திய தரப்பில் பொதுமக்களில் ஒருவர் காயமடைந்தார்.இரு வீடுகள் சேதமடைந்தன.

இதற்கு பிறகு இந்திய இராணுவம் தனது தாக்குதலை அதிகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.