
மத்திய காவல்படையினருக்கு சொந்தமான விற்பனையகங்களில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே விற்க வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெற்றது உள்துறை அமைச்சகம்!
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்தியா தன்னிறைவு பெறும் வகையில் உள்நாட்டு தயாரிப்புகளை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்த பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் இனி துணை ராணுவ கேண்டின்களில் உள்நாட்டு தயாரிப்பு மட்டுமே இருக்கும் என கூறியிருந்தார்.
வருகிற ஜூன் மாதம் முதல் இந்தியா முழுவதும் உள்ள துணை ராணுவ கேண்டின்களில் இது அமலுக்கு வரும் என கூறப்பட்டது. இதன் மூலம்10லட்சம் துணை ராணுவ படை வீரர்களின் குடும்பங்கள் நேரிடையாக சுதேசி பொருட்களை பயன்படுத்துவர் என அறிவிக்கப்பட்டது.
துணை ராணுவ படைகளான
1) மத்திய ரிசர்வ் காவல்படை
2) எல்லை பாதுகாப்பு படை
3) ஷாஸ்திர சீமா பல்
4) இந்தோ திபெத் எல்லை காவல்படை
5) மத்திய தொழில் பாதுகாப்பு படை
6) தேசிய பாதுகாப்பு படை
7)அஸ்லாம் ரைஃபிள்ஸ்
போன்றவற்றின் கேண்டின்களில் ஒவ்வொரு வருடமும் 2,800கோடி ருபாய் அளவிலான வியாபாரம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.