அமெரிக்க கடற்படைக்கு புதிய பயிற்சி விமானம், கடற்படை தேஜாஸ் சரியாக இருக்குமா ??
1 min read

அமெரிக்க கடற்படைக்கு புதிய பயிற்சி விமானம், கடற்படை தேஜாஸ் சரியாக இருக்குமா ??

அமெரிக்க கடற்படை தனது போர் விமானிகளை பயிற்றுவிக்க நீண்ட காலமாக டி45 கோஷாவ்க் எனும் பயிற்சி ஜெட் விமானத்தை பயன்படுத்தி வந்தது தற்போது அமெரிக்க கடற்படை புதிய விமானத்துக்கான தேடலை தொடங்கி உள்ளது.

இதற்கான கோரிக்கையை வெளியிட்டுள்ள அமெரிக்க கடற்படை, இந்த விமானங்கள் விமானந்தாங்கி கப்பலில் தொட்டு செல்லும் திறன் கொண்டதாகவும், இரட்டை இருக்கை வசதிகள் போன்றவற்றை கொண்டதாகவும் இருக்க வேண்டும் என விரும்புகிறது.

தற்போது போட்டியில் போயிங் மற்றும் சாப் கூட்டு தயாரிப்பான டி7ஏ, லாக்ஹீட் மார்ட்டின் டி50ஏ, லியோனார்டோ டி100 ஆகிய விமானங்கள் உள்ளன ஆனால் இவை எதுவுமே மேற்குறிப்பிட்ட தகுதிகளை கொண்டவை அல்ல.

அந்த வகையில் நமது கடற்படை தேஜாஸ் மேற்குறிப்பிட்ட தேவைகளை பூர்த்தி செய்கிறது, கோவாவில் உள்ள மாதிரி கப்பல் ஒடுதளத்திலும், நமது விக்ரமாதித்யா கப்பலிலும் தரை இறங்கியும், மேலேழும்பியும் தனது திறனை நிருபித்து உள்ளது. மேலும் இது நான்காம் தலைமுறை விமானமாகும், தேவைபட்டால் போர் விமானமாகவும் பயன்படுத்தி கொள்ள முடியும்.

ஆனால் அமெரிக்க கடற்படையின் தயாரிப்பு தரம் மற்றும் வேகத்தை நமது ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் சந்திக்குமா என்பது தான் மிகப்பெரிய கேள்விக்குறி !!