
ஃபிலப்பைன்ஸ் நாடு நமது பிரம்மாஸ் ஏவுகணைகள் மீது அதிக ஆர்வம் காட்டி வருகிறது.
அதிவேக பிரம்மாஸ் ஏவுகணைகளை சீன கடற்படைக்கு எதிராக பயன்படுத்தி கொள்ள ஃபிலப்பைன்ஸ் திட்டம் போட்டு உள்ளது.
இதன் காரணமாக ஃபிலப்பைன்ஸ் ராணுவ அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் இந்திய அதிகாரிகளுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.
கடந்த வாரம் ஃபிலப்பைன்ஸ் தலைநகர் மனிலாவில் ஃபிலப்பைன்ஸ் பாதுகாப்பு செயலாளர் டெல்ஃபின் லொரேன்ஸா செய்தியாளர்களிடம் விரைவில் இரண்டு பேட்டரி அளவிலான பிரம்மாஸ் ஏவுகணைகள் வாங்குவதற்கான ஒப்பந்தம் இந்தியாவுடன் கையெழுத்தாகும் என தெரிவித்தார்.
ஆகவே இந்த ஆண்டு இந்தியா இந்த பிரம்மாஸ் ஏற்றுமதியுடன் உலக ராணுவ விற்பனையாளர்கள் வரலாற்றில் ஒர் புதிய அத்தியாயத்தை துவங்க உள்ளது.