கொரோனா பாதிப்பில் எல்லை பாதுகாப்பு படை !!

  • Tamil Defense
  • May 5, 2020
  • Comments Off on கொரோனா பாதிப்பில் எல்லை பாதுகாப்பு படை !!

எல்லை பாதுகாப்பு படையின் 67 வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 24பேர் திரிபுரா மாநிலத்தில் பணியமர்த்தப்பட்டவர்கள் ஆவர். தில்லியில் 41 வீரர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

மேலும் திங்கட்கிழமை அன்று தில்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் பணியாற்றி வந்த எல்லை பாதுகாப்பு படை வீரருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இரண்டு தளங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

மேலும் ஒரு வீரர் சொந்த ஊரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் சொந்த மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் பெயர் மற்றும் ஊரை வெளியிட மறுத்துவிட்டது.

மேற்குறிப்பிட்ட வீரர்களில் ஒருவர் குடும்பமாக (மனைவி மற்றும் 2 குழந்தைகள் உட்பட) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக எல்லை பாதுகாப்பு படை நிர்வாகம் தெரிவித்துள்ளது.