ப்ளாக் ஹார்னெட் !!

“ப்ளாக் ஹார்னெட்” என்பது நார்வே நாட்டை சேர்ந்த ப்ராக்ஸ் டைனமிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள மிகச்சிறிய அளவிலான கையடக்க உளவு விமானமாகும். இது தற்போது அமெரிக்காஇங்கிலாந்து, ஃபிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, ஆஸ்திரேலியா, நார்வே மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் உபயோகத்தில் உள்ளது.

இது 4×1 இன்ச் என்ற அளவில் இருக்கும், பேட்டரியையும் சேர்த்து இதன் எடை வெறுமனே 16கிராம்கள் தான். இது கிட்டத்தட்ட அமைதியானது, மிக நெருங்கி சென்று கண்காணிக்க உதவும்,மேலும் நேரலையில் உயர்தர வீடியோ மற்றும் புகைப்பணங்களை அனுப்பும் திறன் கொண்டது.

ஒரு தொகுதியில் 2 விமானங்கள் இருக்கும் ஒன்றை 90% அளவுக்கு சார்ஜ் செய்ய 25நிமிடங்கள் போதும், மேலும் இதனால் 25நிமிடங்கள் தொடர்ந்து பறக்க முடியும். ஒன்று பறக்கும் நேரத்தில் மற்றோன்றை சார்ஜ் செய்யலாம்.

இதனால் சுமார் 2கிமீ தொலைவு வரை செல்லவும்,21கிமீ வேகத்தில் பறக்கவும் முடியும்.

இந்தியாவில் தேசிய பாதுகாப்பு படையினர் இந்த விமானத்தை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.