போருக்கு தயாராகுங்கள் சீன ராணுவத்திற்கு சீன அதிபர் உத்தரவு !

  • Tamil Defense
  • May 27, 2020
  • Comments Off on போருக்கு தயாராகுங்கள் சீன ராணுவத்திற்கு சீன அதிபர் உத்தரவு !

சீன அதிபர் செவ்வாய் கிழமை அன்று சீனாவின் அதிகாரம் மிகுந்த மத்திய ராணுவ கமிஷன் கூட்டத்தில் பேசுகையில் அங்கு கூடியிருந்த சீன ராணுவ அதிகாரிகளிடம் கொரோனா பிரச்சினைகளை தாண்டி ராணுவத்தை போருக்கு தயார்படுத்துமாறு கேட்டுகொன்டார்.

வீரர்களுக்கான பயிற்சியை அதிகபடுத்தி போருக்கான திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டார்.

இந்தியாவுடன் எல்லை பிரச்சினை, ஹாங்காங் பிரச்சினை மற்றும் தைவான் ஒருங்கிணைப்பு பிரச்சினைகளை தொடர்ந்து இவரின் இந்த பேச்சு வந்துள்ளது பதட்ட நிலைகளை அதிகரித்து உள்ளது.

சமீபத்தில் வேறு சீன இறையாண்மையை சீன ராணுவம் பாதுகாக்கும் என சீன பாதுகாப்பு அமைச்சர் பேசியதும், சீன வெளியுறவு அமைச்சர் அமெரிக்கா புதிய பனிப்போர் நிலைக்கு உலகை இட்டு செல்வதாகவும் பேசியது குறிப்பிடத்தக்கது.

எது எப்படியோ சீனாவுடனான பிரச்சினை தென்சீன கடல்பகுதியிலோ அல்லது தைவான் ஒருங்கிணைப்பிலோ அல்லது இந்திய எல்லையிலோ ஒரு போரை தூண்டும் நாள் மெதுவாக நெருங்கி வருகிறது எனலாம்.