டோக்ராய் போர் – இந்திய வீரர்களின் வீரத்தை உலகம் நேரில் பார்த்த போர்

  • Tamil Defense
  • May 20, 2020
  • Comments Off on டோக்ராய் போர் – இந்திய வீரர்களின் வீரத்தை உலகம் நேரில் பார்த்த போர்

1965 போரில் இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இந்த போரை 3வது பட்டாலியன் ஜாட் வீரர்கள் நடத்தினர்.

அப்போது இந்தியப் படைகள் லாகூருக்கு அருகே போரிட்டு கொண்டிருந்தனர்.லாகூரை கைப்பற்ற வேண்டி படைகள் நகர்ந்தனர்.லாகூர் (பாகிஸ்தான்) முன் ஒரு கிமீ தொலைவில் இருந்தது தான் இந்த டோக்ராய் கிராமம். 6 செப்டம்பரில் இந்தியப் படைகள் டோக்ராயை கைப்பற்றினாலும் உதவிக்கு மேலதிக இந்தியப் படைகள் வர தாமதமானதால் டோக்ராயை விட்டு இந்தியப் படைகள் பின்வாங்க வேண்டியதாயிற்று.பாக் படைகள் டோக்ராயில் வலிமையான காலூன்றியிருந்தன.காரணம் டோக்ராய் வீழ்ந்தால் லாகூர் இந்தியப் படைகளின் கைகளில் விழுந்து விடும்.லாகூர் பாக்கின் பெரிய நகரங்களுள் ஒன்று என்பதால் பாக் தனது சக்திகளை திரட்டி டோக்ராயில் மையம் கொண்டிருந்தது.

மீண்டும் செப் 20 இரவில் இந்தியப் படையின் ஜாட் வீரர்கள் டோக்ராயை திரும்ப கைப்பற்ற விரைந்தனர். பாக் படைகளை சிதறடித்து மீண்டும் ஜாட் வீரர்கள் டோக்ராயை கைப்பற்றினர். பிறகு லாகூர் வரை இந்தியப் படைகள் முன்னேறி லாகூரைக் கைப்பற்றி , போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்பு படைகள் திரும்ப அழைக்கப்பட்டது வரலாறு.

இந்திய இராணுவ வரலாற்றில் டோக்ராய் போர் இரத்தம் தோய்ந்த கடும் போராக இருந்துள்ளது. துப்பாக்கி குண்டுகளில் ஆரம்பித்த போர் (3 ஜாட் வீரர்கள் (இந்தியா) ,16 பஞ்சாப்(பாக்)) கிரனேடு, கத்தி என கடைசியல் இரு நாட்டு வீரர்களும் வெறும் கையால் போரிட்டுள்ளனர்.(20,21செப்)

3 ஜாட் பட்டாலியனைச் சேர்ந்த 550 வீரர்கள் தங்களை விட இருமடங்கு பலம் மற்றும் டாங்க் உதவிகள் பெற்றிருந்த பாக்கின் 16 பஞ்சாப் வீரர்களை அங்கு எதிர்கொண்டனர். ஜாட்டுகளின் திறமை மற்றும் அவர்களை வழிநடத்திய லெட் கலோனல் டெஷ்மன்ட் அவர்களின் திறமையும் இணைந்து பந்தாடி அவர்களின் கமாண்டிங் ஆபிசர் கலோ. கோல்வாலாவை கைது செய்தனர். அவரோடு இணைந்து பேட்டிரி கமாண்டர் ,மேலும் இரண்டு அதிகாரிகள், ஐந்து ஜேசிஓக்கள், 108 வீரர்கள் (உயிரோடு) கைது செய்தனர்.308 பாக் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தியா சார்பில் 86 வீரர்கள் வீரமரணம் அடைந்திருந்தனர்.

22 செப் மதிய அளவில் இரு நாட்டு வீரர்களும் கடுமையாக மோதிக் கொண்டிருந்தனர். ஒரு கம்பெனியை சிதறடித்த இந்திய வீரர்கள் அவர்களை சரணடையச் செய்தனர்.மாலை 5 மணி அளவில் டோக்ராய் இந்தியப் படைகளின் கைக்குள் விழுந்தது.

போரில் வீரமுடன் போரிட்ட ஜாட் வீரர்களுக்கு வீரதீர விருது வழங்கி பெருமை கொண்டது இந்தியா. 4 மகா வீர் சக்ரா, 7 சேனா விருது, 12 Mention in Dispatches மற்றும் 11 வீரர்களுக்கு COAS Commendation Card வழங்கப்பட்டது.

டோக்ராயை கைப்பற்ற வீரர்கள் சிரமம் கொண்டதற்கு காரணம் அதன் இயற்கையாவே அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கால்வாய் தான். ஆம் டோக்ராயை தொட அந்த கால்வாயை கடக்க வேண்டும் என்பதே பெரிய சவால் மிகுந்த பணியாக இருந்தது.