
இந்திய தரைப்படை சமீபத்தில் காஷ்மீரின் மிக முக்கியமான 10 பயங்கரவாதிகளின் பெயர் பட்டியலை வெளியிட்டு இருந்தது.
கூடிய விரைவில் இவர்களை காலி செய்துவிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலையில் ஶ்ரீநகரின் நவாகடல் பகுதியில் இப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ள டாக்டர் சய்ஃபூல்லா மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ள ஜூனையத் ஆகியோர் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில் சமீபத்தில் கொல்லப்பட்ட ஹிஸ்புல் இயக்கத்தின் காஷ்மீர் பிரிவு தலைவனான ரியாஸ் நாய்க்கூவின் இடத்தில் சய்ஃபூல்லா நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.