போதுமான ஆயுதங்கள் இருப்பு உள்ளதா ??, சீராக சப்ளை நடக்குமா ?? இந்திய ராணுவ கமாண்டர்கள் ஆலோசனை !!

  • Tamil Defense
  • May 30, 2020
  • Comments Off on போதுமான ஆயுதங்கள் இருப்பு உள்ளதா ??, சீராக சப்ளை நடக்குமா ?? இந்திய ராணுவ கமாண்டர்கள் ஆலோசனை !!

தில்லியில் தற்போது வருடாந்திர ராணுவ கமாண்டர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது என்பதை அறிவோம்.

இந்த கூட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக இம்முறை ஆயுதங்களின் இருப்பு, சீரான தளவாடங்கள் மற்றும் ஆயுத சப்ளை குறித்து விவாதிக்க பட்டுள்ளது. மேலும் சீன எல்லை நிலவரம் குறித்தும் பேச்சு எழுந்துள்ளது.

லடாக், உத்தராகண்ட் மற்றும் சிக்கீம் ஆகிய பகுதிகளில் ராணுவ தயார்நிலை முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில நாட்களாக பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இருதரப்பிலும் சம அளவில் துருப்புகள் நேர் எதிரே குவிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.