
லடாக்கில் இந்திய சீன எல்லையோரம் மிக பதட்டமான சூழல் நிலவி வரும் நிலையில் இன்று திடிரென இந்திய தரைப்படை தலைமை தளபதி ஜெனரல் நரவாணே லடாக்கின் லேயில் உள்ள 14ஆவது கோர் பிரிவின் தலைமையகத்திற்கு தீடிரென விசிட் அடித்தார்.
அங்கு உயரதிகாரிகளிடம் தயார்நிலை பற்றி கேட்டறிந்து ஆய்வு செய்த அவர் அதிகாரிகள் மற்றும் வீரர்களிடம் எந்த சூழலையும் சமாளிக்கும் வகையில் தயாராக இருக்க வேண்டுமென அறிவுரை வழங்கினார்.
கடந்த சில வாரங்களாக இந்திய படைகள் மற்றும் சீன படைகள் லடாக்கில் படைக்குவிப்பில் ஈடுப்பட்டுள்ள நிலையில் பதட்டம் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.