அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான எஃப்35 ஏ விமானம் ஒன்று ஃப்ளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள எக்லின் படைதளத்தில் இருந்து பயிற்சிக்கு புறப்பட்டது.
பயிற்சி முடிந்த நிலையில் தரையிறங்கும் போது விமானம் விபத்தை சந்தித்து உள்ளது. அதிர்ஷடவசமாக விமானி உயிர் பிழைத்த நிலையில் 96ஆவது மருத்துவ குழு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் தான் இதே படைதளத்தில் எஃப்22 ராப்டர் விமானம் விபத்தை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் உலகின் இரண்டு விலை உயர்ந்த அதிநவீன விமானங்கள் அடுதடுத்து விபத்தை சந்தித்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.