அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள எக்லின் விமானப்படை தளத்தில் இந்த விபத்து நடந்துள்ளது.விமானி பத்திரமாக வெளியேறி தற்போது நல்லபடியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தினசரி பயிற்சி பணியில் இருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
அங்குள்ள மணிப்படி காலை 11.30க்கு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.விபத்து தொடர்பாக தற்போது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
எப்-22 ரேப்டார் தான் தற்போது உலகிலேயே அதிநவீன ஐந்தாம் தலைமுறை விமானமாக உள்ளது.