சீனாவுக்கு அடுத்த சிக்கல் திபெத், ஹாங்காங் ஆகிய பகுதிகள் அமெரிக்காவால் சுதந்திர நாடாக அங்கீகரிக்கப்படுமா ??

  • Tamil Defense
  • May 27, 2020
  • Comments Off on சீனாவுக்கு அடுத்த சிக்கல் திபெத், ஹாங்காங் ஆகிய பகுதிகள் அமெரிக்காவால் சுதந்திர நாடாக அங்கீகரிக்கப்படுமா ??

சுதந்திர நாடாக இருந்த திபெத்தை சீனா படையெடுத்து ஆக்கிரமிப்பு செய்தது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம், தற்போது ஹாங்காங் மற்றும் தைவானை முழுவதுமாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர சீனா காத்துக்கொண்டு இருக்கிறது.

தற்போது இதில் ஒரு புதிய சிக்கல் உருவாகி உள்ளது .அதாவது அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் பிரதிநிதி ஸ்காட் பெர்ரி அமெரிக்கா அதிபர் திபெத்தை சுதந்திர நாடாக அங்கீகரிக்கும் வகையிலான ஒரு மசோதாவை தாக்கல் செய்ய உள்ளார். இவர் ஏற்கனவே ஹாங்காங் விஷயத்திலும் இதைப்போன்ற ஒரு மசோதாவை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு மசோதாக்களும் நிறைவேறினால் அமெரிக்க அதிபர் ட்ரம்பால் இரு பகுதிகளையும் சுதந்திர நாடாக அங்கீகரித்து பிரகடனம் செய்ய முடியும். அப்படி செய்தால் சர்வதேச அளவில் மிகப்பெரிய அளவுக்கு அரசியல் ஆதரவு இந்த இருபகுதிகளுக்கும் கிடைக்கும் அதனால் சீனாவுக்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய நெருக்கடி உருவாகும் என்பதில் சந்தேகமில்லை.