புதிய அத்தியாயம்; லேசர் ஆயுதத்தை வெற்றிகரமாக சோதனை செய்த அமெரிக்க கடற்படை !!

  • Tamil Defense
  • May 24, 2020
  • Comments Off on புதிய அத்தியாயம்; லேசர் ஆயுதத்தை வெற்றிகரமாக சோதனை செய்த அமெரிக்க கடற்படை !!

வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்க கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் பஸிஃபிக் பெருங்கடலில் ஏதோ ஒரு இடத்தில் இந்த சோதனை வெற்றிகரமாக மே16ஆம் தேதி நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யு.எஸ்ஸ.எஸ் போர்ட்லான்ட எனும் நிலநீர் தாக்குதல் கப்பலில் பொருத்தப்பட்ட லேசர் கருவி ஒரு ஆளில்லா விமானத்தை தாக்கி வீழ்த்தி உள்ளது. இந்த லேசர் கருவி 150கிலோவாட் திறன் கொண்டதாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து யு.எஸ்.எஸ். போர்ட்லான்ட கப்பலின் தலைமை கட்டளை அதிகாரி கேப்டன். கேர்ரி ஸான்டர்ஸ் கூறுகையில், இந்த ஆயுதம் மூலமாக ட்ரோன்கள் மற்றும் சிறிய படகுகளை தாக்க முடியும், இதன் மூலம் கடற்சார் போர்முறையில் மிகப்பெரிய மாற்றம் நிகழும் எனவும் கூறியுள்ளார்.

ஆனால் அமெரிக்காவிற்கு இத்தகைய சோதனை ஒன்றும் புதிதல்ல கடந்த 2017ஆம் ஆண்டு யு.எஸ்.எஸ் பான்ஸ் எனும் அமெரிக்க கடற்படையின் நிலநீர் தாக்குதல் கப்பலில் இருந்து இத்தகைய சோதனை நடத்தப்பட்டது ஆனால் அது தற்போதையதை விட சக்தி குறைந்த (30 கிலோவாட் திறன்) ஏ.என்/எஸ்.இ.க்யூ3 எனும் லேசர் ஆயுதம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.