அமெரிக்க கடற்படைக்காக தயாரிக்கப்பட்ட புதிய MH-60R Sea Hawk வானூர்திகளை இந்த வருட இறுதியில் இந்தியாவிற்கு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்த பிப்ரவரி மாதம் இந்தியா வந்திருந்த ட்ரம்ப் அவர்கள் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன்படி முதல் ஆறு வானூர்திகள் அடுத்த வருடம் தான் இந்தியாவிற்கு வழங்கப்படும் என சிக்கோர்ஸ்கி நிறுவனம் கூறியிருந்த நிலையில் தற்போது அமெரிக்க படைக்காக தயாரித்து வைத்திருந்த மூன்று வானூர்திகள் இந்தியாவிற்கு இந்த வருட இறுதிக்குள் அந்நிறுவனம் வழங்க உள்ளது.
இதற்காக அமெரிக்க கடற்படையும் அனுமதி வழங்கியுள்ளது.விரைவில் வழங்கப்பட்டால் விரைவாகவே வானூர்தியில் பயிற்சி மேற்கொள்ள முடியும் என அவர்கள் கூறியுள்ளனர்.
மீதமுள்ள 21 வானூர்திகள் 2021 முதல் இந்தியாவிற்கு வழங்கப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.தற்போது வழங்கப்படும் மூன்று வானூர்திகளும் அமெரிக்க கடற்படைக்காக தயாரிக்கப்பட்டவை.