சீனாவுடனான எல்லை பிரச்சினையில் இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு !!

  • Tamil Defense
  • May 21, 2020
  • Comments Off on சீனாவுடனான எல்லை பிரச்சினையில் இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு !!

அமெரிக்கா கடந்த புதன்கிழமை அன்று இந்தியாவுக்கு சீனாவுடனான எல்லை பிரச்சினையில் ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அரசின் தெற்காசிய பிராந்தியத்திற்கின பிரதிநிதி ஆலிஸ் வெல்ஸ் பேசும்போது அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆசியான் நாடுகள் ஆகியவை சீனாவின் முரட்டுத்தனம் மற்றும் தொந்தரவால் ஓரணியில் திரள்வதாக கூறினார்.

மேலும் சமீபத்திய இந்திய சீன எல்லையோர பதட்டங்கள் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கையில் ” சீனாவின் முரட்டுதனமான நடவடிக்கைகள் புதிதல்ல, தென்சீன கடல் பகுதியாகட்டும் அல்லது இந்திய எல்லையாகட்டும் சீனாவின் நடவடிக்கைகளை கண்டிக்கிறோம் என்றார்.

சீனாவின் நடவடிக்கை மற்ற நாடுகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் உள்ளது என்றும் சீனாவுக்கு எதிரான போக்கு சர்வதேச அளவில் அதிகரித்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

ஆஃப்கானிஸ்தான் பற்றிய கேள்விகாகு பதிலளித்த அவர் “ஆஃப்கானிஸ்தான் நாட்டில் இந்தியாவின் பங்கு இன்றியமையாதது, அளப்பரியதாகும். ஆனால் அங்கு நேரடியாக களம் இறங்க வேண்டுமா என்பது இந்திய அரசினுடைய முடிவை பொறுத்தது” என்றார்.