இந்திய கடற்படைக்கு 24 ஹெலிகாப்டர்கள் வழங்கும் ஒப்பந்தத்தில் சிகோர்ஸ்கி நிறுவனம் கையெழுத்திட்டது !!

  • Tamil Defense
  • May 15, 2020
  • Comments Off on இந்திய கடற்படைக்கு 24 ஹெலிகாப்டர்கள் வழங்கும் ஒப்பந்தத்தில் சிகோர்ஸ்கி நிறுவனம் கையெழுத்திட்டது !!

அமெரிக்காவின் சிகோர்ஸ்கி நிறுவனம் அமெரிக்க கடற்படையுடன் இணைந்து இந்திய கடற்படைக்கு 24 எம்.ஹெச்60 ஆர் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறை ஹெலிகாப்டர்களை வாங்க ஒப்பந்தும் கையெழுத்து ஆகியுள்ளது.

இந்த ஒப்பந்தத்திற்கு கடந்த ஃபெப்ரவரி மாதமே இந்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் அனுமதி அளித்த நிலையில் இதற்கான எதிர்பார்ப்பு நிலவி கொண்டு இருந்தது.

தற்போது ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த ஒப்பந்தம் அமெரிக்க கடற்படையின் வெளிநாட்டு வர்த்தக வழிமுறைகளின் கீழ் நமக்கு இந்த ஹெலிகாப்டர்கள் விற்கப்படும்.

இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 905மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். முதலாவது ஹெலிகாப்டர் 2021ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஹெலிகாப்டர்கள் நமது முன்னனி போர்க்கப்பல்களில் நிறுத்தப்படும், இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் சீன மற்றும் பாகிஸ்தான் கடற்படைகளின் நீர்மூழ்கி கப்பல்களை கண்டுபிடிக்கவும் தேவைப்பட்டால் தாக்கி அழிக்கவும் இவை பெருதவியாக அமையும்.

இந்த ரக ஹெலிகாப்டர்கள் ஏ.ஜி.எம்.114 ஹெல்ஃபயர் ஏவுகணைகள், மார்க்54 நீரடிகணைகள், அதிநவீன துல்லிய தாக்குதல் ராக்கெட்டுகள், குழு பாதுகாப்பு துப்பாக்கிகளை கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.